லேபிள்கள்

27.8.14

இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி

இளநிலைமுதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால்,முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரியமனுவைமதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்ததுமதுரை லதாதாக்கல் செய்த
மனுஇளநிலை (பி.எஸ்.சி., -வேதியியல்), முதுகலை (எம்..,-ஆங்கில இலக்கியம்), பி.எட்.,
(ஆங்கிலம்படித்துள்ளேன்தொழில்மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.


முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு,என் பெயரை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (டி.ஆர்.பி.,)வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்ததுடி.ஆர்.பி., சார்பில் 2012ஜன.,7 ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன்பணிநியமனத்திற்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் 2012 ஏப்.,4 ல்வெளியானதுஎன் பெயர் இடம் பெறவில்லைபட்டியலில் பெயரைசேர்த்துஆசிரியர் பணி வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்குஉத்தரவிட வேண்டும்என குறிப்பிட்டார்நீதிபதி எஸ்.நாகமுத்துமுன் விசாரணைக்கு வந்ததுஅரசு கூடுதல் வக்கீல் எஸ்.குமார்ஆஜரானார்நீதிபதிதமிழ்நாடு மேல்நிலை பள்ளி சிறப்பு விதிகள்படிமனுதாரர் இளநிலைமுதுகலை மற்றும் பி.எட்., ஆகியவற்றில்ஆங்கிலம் படித்திருக்க வேண்டும்ஆனால்மனுதாரர் இளநிலைவேதியியல் படித்துள்ளார்இளநிலைமுதுகலையில் வெவ்வேறுபாடங்கள் படித்திருந்தாலும், 1:1 என்ற விகிதத்தில் முன்னுரிமைவழங்கலாம் என மனுதாரர் கோருகிறார்இதுஏற்கனவே தேர்வாகிஇடமாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு பொருந்தும்புதிதாகதேர்வு செய்யப்படுவோருக்குஇவ்விதி பொருந்தாதுமனு தள்ளுபடிசெய்யப்படுகிறதுஎன்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக