லேபிள்கள்

25.8.14

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம்

கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிலப் பாடங்களில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.


           கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சில பாடங்களில் மட்டும் சிறியமாற்றம் ஏற்படுத்தப் பட்டு கடந்த 12 ஆம் தேதி புதியப் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.

 தமிழ் பாடப்பிரிவில் மாற்றம்:    
 தமிழ் பாடத்தில் முதலில் வெளியிடப் பட்டுள்ள இறுதிப் பட்டியலில்  13TE13202227 GEETHA N           F    BC       6/6/1979      74.99    GW      CV  என்ற பெண்மணியின் பெயர் 265 வது தர வரிசையில் இடம்பெற்று CV எனப் படும் தற்போதைய காலிப் பணியிடத்தில் இடம்பெற்றிருந்தது.

ஆனால் கடந்த12/08/2014 அன்று திருத்தியமைக்கப் பட்ட இறுதிப் பட்டியலில் 13TE13202227   GEETHA N     F        BC      G     6/6/1979   74.99    BW    BV என்று மாற்றியமைக்கப் பட்டு தர வரிசையில் 16 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.அதோடு BV எனப்படும் பின்னடைவு காலிப் பணியிடத்திலேயே இவருக்கு பணி பெரும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

புதியதாக திருத்தியமைக்கப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் Medium எனும் கட்டம்( coloumn) புதியதாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக