லேபிள்கள்

24.8.14

வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் 6-வது நாளாக போராட்டம்

ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கைவிட வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 6-ஆவது நாளை எட்டியுள்ளது.

வெயிட்டேஜ் முறைக்கு எதிராக சென்னை காமராஜர் சாலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.அண்மையில் படிப்புகளை முடித்தவர்களுக்கு மட்டுமே வெயிட்டேஜ் முறை சாதகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறையால் பாதிப்பு ஏற்படுவதாக பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக அரசுப்பணி கனவுடன் காத்திருத்த தங்களுக்கு வெயிட்டேஜ் காரணமாக பணி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனிடையே இப்பிரச்னையில் உரியதீர்வைப் பெற பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தை அணுகுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

வெயிட்டேஜ் கணக்கிடும் முறை:

பன்னிரெண்டாம் வகுப்பு, இளநிலைப் பட்டம், D.T.Ed. அல்லது பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை 12-ம் வகுப்புக்கு அதிகபட்சம் 15, D.T.Ed-க்கு அதிகபட்சம் 25, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சமாக 60 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இதேபோல் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12-ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு60 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.இந்த முறையில் ஒவ்வொரு படிப்பிலும் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் சதவீதம் நேரடியாக வெயிட்டேஜ் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்படும் தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தை அந்தந்த படிப்பிற்கான அதிகபட்ச வெயிட்டேஜ் எண்ணுடன் பெருக்கி, 100 ஆல் வகுத்து வெயிட்டேஜ் மதிப்பெண்களை கணக்கிட முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக