திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 8 உயர்நிலைப் பள்ளிகள் 2014- 15-ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
சந்திரசேகர் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 132 அரசு உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2014-15-ஆம் கல்வி ஆண்டில் 8 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் கூறியது: இந்த மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள பூதூர், புதுகும்மிடிப்பூண்டி, ஞாயிறு ஊராட்சி ஆகிய இடங்களில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதேபோல் திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம், வெங்கல், மெய்யூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளிகளும், திருவள்ளூரில் உள்ள காமூனா சகோதரர்கள் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆகிய 8 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், விரைவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக