லேபிள்கள்

21.10.14

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு

உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான இறுதி மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.

ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆகிய நான்கு துறை உதவிப் பேராசிரியர் பணிக்கான இந்த இறுதி மதிப்பெண் பட்டில் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1093 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பணியை டி.ஆர்.பி. மேற்கொண்டு வருகிறது.
கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயரின வளர்ப்பு ஆகிய நான்கு பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
இவர்களுக்கான இறுதி மதிப்பெண் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த நான்கு பாடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக