அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தேவை குறித்த இறுதி பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதியின்றி உள்ளது.
குறிப்பாக நடுநிலையில் இருந்து தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவியருக்கு மட்டும் கழிப்பறை இருந்தாலும் போதிய வசதிகளின்றி உள்ளது.எனவே வரும் காலங்களில், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள் இருக்கக்கூடாது என்ற நோக்கில், அனைவருக்கும் கல்வித் திட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கழிப்பறை வசதி மற்றும் தேவை குறித்து கணக்கெடுத்தனர்.இதையடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் மூத்த தலைமையாசிரியர்கள் கொண்ட குழு அமைத்து, கணக்கெடுப்பு குறித்த இறுதி பட்டியல் தயாரித்து இம்மாதம் 29ம் தேதிக்குள் பள்ளிக் கல்வித்துறை இணைஇயக்குநருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக