2015-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்காக, பெயர் சேர்ப்பது மற்றும் திருத்தங்களைச் செய்வதற்கு நாளை சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1.1.15 தேதியன்று 18 வயது பூர்த்தியாகும் நபர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 44 ஆயிரத்து 513 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 24 ஆயிரத்து 182 விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்காக 26-ந் தேதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. பெரும்பாலும் பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடத்தப்படும். இங்கு விண்ணப்பங்களை வாங்கி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், மாற்றம் போன்றவற்றுக்காக நிரப்பி அளிக்கவேண்டும்.
காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரையும் விண்ணப்பங்களை வாங்கும் அதிகாரிகள் இருப்பார்கள். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், இந்த முகாம் தொடர்பாக எழும் சந்தேகங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் கேட்டுத்தெளிவு பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக