பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கணினிபயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்துகலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;தமிழக பள்ளிகல்வித்துறையில் காலியாக உள்ள 652 தொழிற்கல்வி கணினிபயிற்றுநர் பணி காலியிடங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது. இதற்காகவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பதிவு மூப்பு பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு பி.எஸ்சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லதுபி.எஸ்சி., தகவல் தொழில் நுட்பத்துடன் பி.எட்., முடித்திருக்கவேண்டும்.முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைத்துபதிவுதாரர்களும், முன்னுரிமையற்ற பிரிவில் எஸ்.டி., பிரிவினர்3.9.2011 வரையிலும், எஸ்.சி.,அருந்ததியினர் 20.12.2010 வரையிலும்,பி.சி., முஸ்லிம் 17.8.2009 வரையிலும், எஸ்.சி.,-எம்.பி.சி., பி.சி.,உள்ளிட்ட இதர பிரிவினர் 22.8.2008 வரையிலும் பதிவுசெய்துள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகவிளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தங்கள் பெயர்இடம் பெற்றுள்ளதா என்பதை வரும் 31.10.2014ம் தேதிக்குள் நேரில்சென்று உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
பட்டியியலில் பெயர் இல்லாதவர்கள் அசல் வேலை வாய்ப்புஅலுவலக அடையாள அட்டையுடன், மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக