அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாநில அளவிலான பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட் டுள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்க ளுக்கு அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. அதன்படி, மொத்த முள்ள 652 காலியிடங்களில் 138 இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 156 காலியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு (30 சதவீதம்)செய்யப்பட்டுள்ளன.
கணினி ஆசிரியர் பணிக்கு பிஇ (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ, பிஎஸ்சி (இன்பர்மேஷன் டெக்னாலஜி) இவற்றில்ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு டன் பிஎட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அத்துடன் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்திருக்கவேண்டும்.
கணினி ஆசிரியர் நியமனத் துக்கான அறிவிப்பு வெளியாகி ஓரிருவாரங்கள் ஆகியும் இடஒதுக்கீட்டுடன் கூடிய காலியிடங்களின்பட்டியல் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையிடம் இன்னும்ஒப்படைக்கப்படவில்லை.
பதிவுமூப்பு அடிப்படையி லான தற்போதைய கணினி ஆசிரியர்நியமனம் உச்சநீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது.
வரும் காலத்தில் கணினி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமேநியமிக்கப்படுவர் என அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக