லேபிள்கள்

1.12.14

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜ் அனுப்பிய சுற்றறிக்கை:
வரும் 2015 மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் பெயர் பதிவு செய்து பயிற்சி பெற ஏற்கனவே இரு முறை அனுமதி வழங்கப்பட்டது.

இவ்விரு வாய்ப்பில் பதிவு செய்யாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள், எட்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியுறும் தனித்தேர்வர்கள், 2015ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பினால் இன்று ( டிச.,1) தங்களது பெயர்களை பதிய இதுவே கடைசி வாய்ப்பு.

செய்முறை பயிற்சிக்கான விபரம் அறிய அரசுத் தேர்வு சேவை மையத்தை அணுகலாம். www.tndge.in என்ற இணையளத்தில் விபரங்களை பெறலாம். செய்முறை தேர்வுக்கு பதிவு செய்யாத தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக