லேபிள்கள்

30.11.14

ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில்மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த கடந்த வருடம் பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா கடும் நடவடிக்கைஎடுத்தார்.
மெதுவாக கற்கக்கூடிய மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொருபாடத்திலும் அவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கும் வகையில்தனியாக கையேடு அச்சடித்து அந்தந்த மாவட்ட கல்வி நிர்வாகம்ஆசிரியர்களுக்கு விநியோகித்ததுஅதைக்கொண்டு ஆசிரியர்கள்பாடம் கற்பித்தனர்அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தேர்ச்சிசதவீதம் அதிகரித்ததுஇந்த வருடம் 95 சதவீத தேர்ச்சி கொண்டு வர.சபீதா முடிவு செய்துள்ளார்.

நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் சென்னைதிருவள்ளூர்,காஞ்சீபுரம்விழுப்புரம்கடலூர்திருவண்ணாமலை ஆகிய 6மாவட்டங்களில் குறைந்த தேர்ச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பென்டிங்மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அந்த 6 மாவட்டங்களை சேர்ந்தமுதன்மை கல்வி அதிகாரிகள்மாவட்ட கல்வி அதிகாரிகள்,அனைத்து பாடத்திலும் நன்றாக பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள்அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை துணை செயலாளர்கார்த்திக் தலைமை தாங்கினார்பள்ளிக்கல்வி இயக்குனர்வி.சி.ராமேஸ்வர முருகன்இணை இயக்குனர்கள் ராஜேந்திரன்,கருப்பசாமிகார்மேகம்முதன்மை கல்வி அதிகாரிகள் .அனிதா,சாந்திபி.பொன்னையாகுமார்பாலமுரளிசந்திரசேகரன் ஆகியோர்கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

அரசு தேர்வில் எந்தெந்த பிரிவில் இருந்து கேள்விகள் எடுக்கப்படும்என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்வதற்காக புளூபிரிண்ட்டைவகுப்பில் ஆசிரியர்கள் ஒட்டவேண்டும்மெதுவாக கற்கும்மாணவர்களிடம் எந்த பாடத்தில் எந்த பகுதியில் பலவீனம்உள்ளவர்கள்எதில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதை அறிந்துஅதற்கேற்ற படி அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.அரையாண்டு தேர்வு விடுமுறையிலும் மாணவர்களுக்குஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி கொடுக்கவேண்டும்இப்படி செய்தால்தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.

இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.

நேற்று பயிற்சி பெற்ற அந்த ஆசிரியர்களை கொண்டு அந்தந்தமாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சிபாடம் நடத்தும் ஆசிரியர்களுக்குதனியாகவும்பிளஸ்-2 பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்குதனியாகவும் இன்று (சனிக்கிழமைபயிற்சி நடத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக