லேபிள்கள்

3.12.14

ஒதுக்கியது புதுசு.. கிடைத்ததோ பழசு...: புகைச்சலில் கல்வி அதிகாரிகள்

தமிழக கல்வித்துறையில் மாவட்ட அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் புதிய ஜீப்கள் அல்லது கார்களை உயர் அதிகாரிகள் வைத்துக் கொண்டு அவர்கள் பயன்படுத்திய பழைய வாகனங்களை 'தள்ளிவிடுவதால்' மாவட்ட அதிகாரிகள் புலம்புகின்றனர்.


பள்ளிகள் ஆய்வு, அலுவல் பணிகளுக்காக மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) அந்தஸ்து அதிகாரிகளுக்கு கல்வித்துறை ஜீப் அல்லது கார்களை ஒதுக்குகிறது. குறைந்தபட்சம் 2.50 லட்சம் கி.மீ., தூரம் ஓடியது அல்லது 15 ஆண்டுகள் பயன்பாடு முடிந்த பின் அந்த 'வாகனங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல' என சான்றிதழ் அளிக்கப்பட்டு 'கண்டம்' ஆக்கப்படுகின்றன. கண்டம் ஆன வாகனத்திற்கு பதில் கல்வித்துறை புதிய வாகனம் வழங்கும். சமீபத்தில் மேலூர் கல்வி மாவட்ட அலுவலக ஜீப் 'கண்டம்' ஆனது. புதிய வாகனம் வழங்கவில்லை. சில மாதங்களுக்கு முன் தேனி மாவட்டத்தில் இரண்டு, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தலா ஒரு வாகனம் 'கண்டம்' செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டன. நீண்ட காத்திருப்பிற்கு பின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புதிய வாகனங்கள் கல்வித்துறையால் சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டன. ஆனால் அந்த வாகனங்களை சென்னையில் இணை இயக்குனர்கள் பயன்பாட்டிற்கு வைத்துக்கொண்டு அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திய பழைய வாகனங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு தள்ளி விட்டுள்ளனர். இதனால் மாவட்ட அதிகாரிகள் புலம்பி தவிக்கின்றனர்.

கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''உயர் அதிகாரிகளின் இந்த செயல்பாடு இயக்குனர், செயலாளருக்கு தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. கீழ் அதிகாரிகளான எங்களால் என்ன செய்ய முடியும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக