"அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் பால், வரும் ஆண்டிலிருந்து, ஐந்து நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது,” என, முதல்வர் சித்தராமையா கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தின் கீழ், தற்போது, அங்கன்வாடி மையங்களில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தினமும், 8 லட்சம் லிட்டர் பாலும், ஆண்டுக்கு, 4,800 கோடி ரூபாயையும் அரசு செலவழித்து வருகிறது.
முதல்வர் சித்தராமையா கூறியதாவது: அங்கன்வாடி மையங்களில், மூன்று நாள் பால் வழங்கும் திட்டத்தை, வரும் ஆண்டிலிருந்து, ஐந்து நாட்களாக உயர்த்தப்படும். தினம், 35 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி அளவு, 63 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தி விவசாயிகளுக்கு, லிட்டருக்கு இரண்டு ரூபாய் வீதம் அளிக்கப்படும் மானிய தொகையும், நான்கு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பால் உற்பத்தி, தினமும், 70 லட்சம் லிட்டரை எட்டும் என்று கருதுகிறோம். உணவு மற்றும் பொது வினியோக நியாய விலை கடைகளில், பயனாளிகள் அனைவரின் பெயரையும் கடைக்காரர்கள் எழுதி வைக்க வேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது, கிரிமினல் வழக்கு தொடர, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் நலனுக்காக, அறிமுகப்படுத்திய அன்ன பாக்யா திட்டத்துக்காக, அரசு, 4,500 கோடி ரூபாய் செலவழித்து வருகிறது. இதன் மூலம், 1.03 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இத்திட்டத்தில், வினியோகிக்கப்படும் அரிசி, கிலோ, 25 ரூபாய்க்கு மார்க்கெட்டில் வாங்கப்படுகிறது. இதனால், போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிப்பது தீவிரமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக