திண்டுக்கல், : பங்களிப்பு ஒய்வூதியத்தில் இருந்து விலக்களித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரி யர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வேடசந்தூரில் பட்ட தாரி ஆசிரியர் கூட்டமைப் பின் வட்டாரப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஜோசப்சேவியர், மாநில துணைத் தலைவர் பாபு, மாவட்ட இணைச் செயலாளர்கள் ராஜ்மோகன், வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஒன்றியத்தில் ஆசிரியர்களின் பணிப்பலன் மற்றும் பணப்பலன்களைப் பெறுவ தில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். அறிவியல் உதவித்தொடக்கக் கல்வி அறிவியல் பாடம் பயின்றவர்களையே நியமனம் செய்ய வேண்டும். பங்களிப்பு ஒய்வூதியத்தில் இருந்து விலக்களித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளி ட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச் செய லாளர் பேட்ரிக்ரெய்மா ண்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக