தமிழக அரசு 128 தொடக்கப்பள்ளிகளை புதிதாக தொடங்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதன்முலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் கல்விபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.புதிய ஆசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசாணை தற்போது வெளியிட்டாலும் புதிய பள்ளிகள் நடைமுறை பயன்பாட்டுக்கு வருவதற்கு ஆறுமாதங்கள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம்.அலுவலக நடைமுறைகள் நிதி ஒதுக்கீடு புதிய கட்டிடம் கட்டுதல் மாணவர் சேர்க்கை ஆசிரியர்களை பணியமர்த்தல் என பல்வேறு பணிகளை முடித்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக