'தேர்வே எழுதாத சென்னை மாணவிக்கு வழங்கிய மதிப்பெண் பட்டியல், தற்காலிக சான்றிதழ்களை திரும்ப அனுப்பக்கோரி', காரைக்குடி அழகப்பா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வியின் 214 கல்வி மையங்கள் மூலம் இந்தியா, வெளிநாடுகளைச் சேர்ந்த 1.20 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2004ல் இளங்கலை தமிழ் இலக்கியம் பாடப்பிரிவில் சேர்ந்தார் சென்னை மாணவி ஒருவர். ஆனால் இப்பாடப்பிரிவின் 18 பாடங்களில் எந்த ஒரு பாடத்திற்கும் தேர்வு எழுதவில்லை. பத்தாண்டுகளை கடந்த நிலையில் கடந்த 2013, டிசம்பரில் நடந்த தேர்வில் அம்மாணவி தேர்ச்சி பெற்றதாகக் கூறி, தொகுப்பு மதிப்பெண் பட்டியல், புரோவிஷனல் சர்டிபிகேட்டை மாணவியின் வீட்டுக்கே அனுப்பி வைத்துள்ளது பல்கலை.
எப்படியோ தவறை அறிந்த பல்கலை அதிகாரிகள் கடந்த நவ.,26ல் மாணவி பெற்ற மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழை உடனே திருப்பி அனுப்புங்கள் என கடிதம் அனுப்பியுள்ளனர். இப்பல்கலையில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் 26 மதிப்பெண் பெற்ற மாணவர் 62 மதிப்பெண்ணுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தது, பல்கலை தேர்வின் வினாத்தாளில் நடந்து முடிந்த தேர்வின் வினாக்களை கேட்டது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் இப்படி ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக