தேனி: அரசு விடுதி மாணவர்களுக்கு தினமும் ரூ. 25க்கு மூன்றுவேளை உணவு வழங்க வேண்டி உள்ளதால் விடுதி வார்டன்கள் புலம்பி தவிக்கின்றனர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 4,300 மாணவர் விடுதிகள் இயங்குகின்றன. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், ஆதரவற்றோர் குழந்தைகளை அரசு
விடுதிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். நான்காம் வகுப்பு முதல் கல்லூரி வரையான மாணவ மாணவியர் தனித்தனி விடுதிகளில் தங்கியுள்ளனர். அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை சுண்டல், சுக்குமல்லி காபி, இரவு சிற்றுண்டி என ஒவ்வொரு நேரமும் உணவு வழங்க 'மெனு' உள்ளது. மூன்று நேர உணவுக்கும் மாதம் தோறும் ஒரு மாணவருக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் தொகை ரூ. 759 தான். இதன்படி பார்த்தால் சராசரியாக ஒரு நாளைக்கு ஒருமாணவருக்கு ரூ.25ல் மூன்று வேளை உணவு வழங்க வேண்டும். இதனால் உணவின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. தற்போது உள்ள விலைவாசி உயர்வு, வாழ்க்கை தரத்திற்கு ஏற்ப விடுதிகளில் உணவு கட்டணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக