லேபிள்கள்

23.12.14

யானை, சிறுத்தை, காட்டுப்பன்றியுடன் காட்டுக்குள் ஒரு கல்விக் கூடம்: பீதியுடன் படிக்கும் மாணவர்கள்

சுருளியாறு அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுத்தை, யானை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வருவதால் மாணவர்களை பாதுகாக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.


தேனி மாவட்டம் கூடலூர் அருகே ஹைவேவிஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சுருளியாறு மலைப்பகுதி. மிகவும் அடர்ந்த இந்த வனப்பகுதிக்குள் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அருகில் உள்ள வளநாடு, ஒத்தமேட்டுக்களம், குள்ளப்பகவுண்டன்பட்டி தோட்டங்களில் வசிப்போரின் 30 குழந்தைகள் இங்கு படிக்கின்றனர். அடர்ந்த காட்டுப் பகுதியான இங்கு 6 மாதங்களுக்கு முன் சிறுத்தை தாக்கி ஒருவரும், 8 மாதங்களுக்கு முன் யானை மிதித்து ஒருவரும் உயிரிழந்தனர். சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி வளாகத்திற்குள் தினமும் யானைகள் வந்து விடுகின்றன. எந்நேரமும் பள்ளி வளாகத்திற்குள் காட்டுப் பன்றிகள் மேய்கின்றன. அவ்வப்போது சிறுத்தையின் நடமாட்டமும் உண்டு. வகுப்பறைக்குள்ளேயே குரங்குகள் முகாமிடுவதும் வழக்கம். வனவிலங்குகள் உலாவுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. ஆசிரியர்களும் பயத்துடன் பாடம் நடத்த முடியாமல் தவிக்கின்றனர். மாணவர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பினால் போதும் என்ற நிலையே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக