லேபிள்கள்

23.12.14

சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்!

பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற
சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க
கூடாது. அனைத்து மாணவனும் முழு திறன் கிடைக்கும் வரை காலம்
எடுத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.
ஆசிரியர் பணி தவிற மற்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது.
எந்த பள்ளியில் பணி செய்கிறார்களோ அந்த பள்ளியின் அருகில்
அவர்களுக்கான இருப்பிடம் அமைத்து தரவேண்டும்.

ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அனைத்தும்
ஏற்படுத்தி தரவேண்டும். அவர்களுடைய சிந்தனை முழுவதும் பள்ளி
மற்றும் பள்ளி சார்ந்த்தாக இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தரும்பட்சத்தில் எல்லாம் சாத்தியம்.சம்பளம் மட்டும் 
கொடுத்தால் போதாது.
ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லுகிறார்கள் மாணவர்களை கண்டிக்க
அனுமதி இல்லாததால்தான் மாணவர்கள் கெட்டு போகிறார்கள்என்று. 
கண்டிக்கிறது என்றால் என்ன? என்று எனக்கு தெரியவில்லை.யாராவது கண்டிப்பது என்றால் என்ன என்று விளக்குங்கள்.
நாங்க படிக்கும் போது இரண்டு மாணவர்களுக்கு சண்டை எனறால் 
உடனே ஆசிரியரிடம்தான் செல்வார்கள் . இபாபோது பிரச்சனையை
ஆசிரியரடம் கொண்டுவருவதில்லை.அவர்களே தீாக்கிறார்கள்அல்லது ஊர்க் காரா்களை உள்ளே அழைத்து விடுகிறார்கள். ஆசிரியர்என்றல்ல வயதில் மூத்தவர் என்ற எண்ணமே மாணவரிடத்தில் துளிகூட கிடயைாது. வெ ளியே இருந்து கருத்துக்கள் கூறலாம் . இப்போதுஉள்ள மாணவர்களை பறறி தெரிநது கொள்ளுங்கள்!!!

ஆசிியர்கள் கூறுகின்ற நீதி போதனைக் கதைகளை கேட்பதறகு கூடதயாராக இல்லை . பிறகு எங்கு பின்பற்றுவது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக