கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர்க்கையை நடத்தப் போவதில்லை என, தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.
25 சதவீதம்:
நாட்டில், 6 - 14வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கல்வி அடிப்படை உரிமை. நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடம் அளிக்க வேண்டும். அதற்கான கட்டணத்தை அரசே வழங்கும் என்பது, கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படை. இந்த சட்டம், 2009ல் அமலுக்கு வந்த போதும், தமிழகத்தில், 2011ல் அமல்படுத்தப்பட்டது. அதன் பின், இச்சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தனியார் பள்ளிகளில், கடந்த, 2013 - 14ல், 49,864 மாணவர்; 2014 - 15ல், 89,954 மாணவர் என, 1,39,818 பேர், இரண்டு ஆண்டுகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இப்பள்ளிகளுக்கு, வகுப்பு அடிப்படையில், 5,000 - 6,000 ரூபாயை கட்டண மாக அளிக்க, தமிழக அரசு முடிவெடுத்தது. இந்த வகையில், 2013 - 14ல், 25.13 கோடி ரூபாய்; 2014 - 15ல், 45.27 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாக, இந்த கட்டணத்தை தமிழக அரசு வழங்கவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறியதாவது: தமிழக அரசு, எங்களுக்கு தர வேண்டிய, கட்டணத் தொகையை தரவில்லை. பள்ளிகளின் முதல்வர் பெயரில் வங்கி கணக்கு துவக்குமாறு கூறினர்; துவக்கிவிட்டோம். மாணவர் சேர்க்கை குறித்த அனைத்து விவரங்களையும் அளித்து விட்டோம். ஆனால், இதுவரை, கட்டண தொகை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுக்கான பணத்தை, இந்த ஆண்டு செப்டம்பரில் தருவதாக கூறினர்; இதுவரை தரவில்லை. சமீபத்தில், மத்திய அரசு, அந்த பணத்தை தரமுடியாது என்று கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

விவர அறிக்கை:
அதே நேரம், பெற்றோர் பல வகைகளில் எங்களை மிரட்டுகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு, 25 சதவீத மாணவர் சேர்க்கையை நடத்தப் போவதில்லை என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். இதுகுறித்து, கல்வித்துறை தரப்பில் கேட்ட போது, 'கடந்த ஆண்டு கட்டணம் தொடர்பான விவர அறிக்கை, தயாரிக்கப் பட்டு அதற்கான கோப்பு, நிதித்துறையில் உள்ளது. இன்னும் அனுமதி வரவில்லை. வந்ததும் கொடுத்து விடுவோம். இந்த ஆண்டிற்கான கட்டணத்திற்கு, மத்திய அரசு அனுமதி பெற, கோப்பு அனுப்பப்பட்டு உள்ளது' என்றனர்.
மத்திய அரசு மறுப்பு ஏன்?
கடந்த, 2013 - 14ல், மாணவர் சேர்க்கையின் போது, தமிழக அரசு, குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால், மாணவர்களை சேர்த்த, பள்ளிகளை பொறுத்தவரை, கட்டணம் வேறுபட்டது. இதுகுறித்த அறிக்கை, மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய அரசோ, அரசு பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தரப்படும் என கூறியது. தமிழக அரசின் அறிக்கைபடி, கட்டணத்தை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக