விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக எட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என, முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அடுத்தாண்டு மார்ச்சில் நடக்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்விற்காக மாணவர்களின் நலன்கருதி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆமத்தூர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்தங்கல், அரசு மேல்நிலைப்பள்ளி, செவல்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி, மலைப்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜபாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி, டி.ராமச்சந்திரபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, தைலாபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சத்திரப்பட்டி ஆகிய எட்டு மையங்களுக்கு புதிதாக அனுமதி வழங்கி அரசு தேர்வுகள் துறை இயக்கம் உத்தரவிட்டுள்ளது, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக