லேபிள்கள்

27.12.14

எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்

பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது.

பரமக்குடி அருகே பகைவென்றியை சேர்ந்த மணி, 20, நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று காலை 11 மணிக்கு தலைமை ஆசிரியர் முருகன், ஆங்கில பாடத்திற்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். அப்போது மணி, தனது நோட்டில் இருந்த காகிதத்தை கிழித்து கீழே போட்டுக்கொண்டே இருந்தார். இதை தலைமை ஆசிரியர் கண்டித்தார். இதனால் தலைமை ஆசிரியருடன் மணி வாக்குவாதம் செய்தார். சிறிது நேரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து மணி கூறுகையில். ''எனது நோட்டில் காகிதத்தை கிழித்து கீழே போட்டேன். அப்போது தலைமை ஆசிரியர், 'எதற்கு கிழித்து போடுகிறாய்' என தகாத வார்த்தையில் பேசி, கம்பால் அடித்தார்,'' என்றார்.

தலைமை ஆசிரியர் முருகன் கூறுகையில், “நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது தொடர்ந்து காகிதத்தை கிழித்து போட்டதால் கண்டித்தேன். என்னை அவன் தாக்கியதால் நிலை குலைந்து கீழே விழுந்தேன். தொடர்ந்து என்னை தாக்கிவிட்டு ஓடினான்,” என்றார்.

பரமக்குடி கல்வி அலுவலர் பழனியாண்டி கூறுகையில், “தலைமை ஆசிரியர், மாணவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக