அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் ஜூன் 13 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் மே 16 ஆம் தேதி 232 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிக அளவிலான பண விநியோகம் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மே 23 ஆம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்தும், தேர்தலை முழுமையாக ரத்து செய்துவிட்டு புதிய அறிவிக்கை வெளியிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மூன்று வாரத்துக்குதேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.இந்நிலையில், திடீரென்று ஜூன் 13 ஆம் தேதி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வாக்கு எண்ணிக்கை என்று என அறிவிக்காத தேர்தல் ஆணையம், ஜூன் 20 ஆம் தேதிக்குள் இத்தொகுதிகளில் தேர்தல் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக