லேபிள்கள்

15.5.16

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு: மாநில மந்திரிகளுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை

புதுடெல்லி, கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பினால் இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான
பொதுநுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை உருவாகி உள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், குஜராத், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் இடையே கடும் அதிருப்தியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது பல்வேறு மாநில எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு இது குறித்து தங்கள் எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். சில மாநிலங்களின் எம்.பி.க்கள் நடப்பு கல்வியாண்டில் பொது நுழைவுத்தேர்வை நிறுத்தி வைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினர்.இதைத்தொடர்ந்து மாநில சுகாதார மந்திரிகள் மற்றும் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா தலைமையில் நாளை(திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது.கூட்டத்தில், தற்போது மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு குறித்த பிரச்சினையில் மத்திய அரசு கோர்ட்டை எப்படி அணுகுவது என்றும் முடிந்தால் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக உள்ள நுழைவுத்தேர்வை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடும் வகையில் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.மராட்டியம் ஜனாதிபதியிடம் முறையிடுகிறது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி மராட்டிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சில மாநிலங்களில் தனிப்பட்ட முறையில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், மராட்டியமும் இதில் இடம்பிடித்துள்ளது.இதையொட்டி, இதுபோன்ற மாநிலங்களின் மருத்துவக்கல்வி மந்திரிகளை மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிவு பெற்றதும், தேவைப்பட்டால் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் என்று மந்திரி வினோத் தாவ்டே தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக