வேளாண்மை படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்வது குறை வாகவும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் சேர்வதும் வேளாண் பல்கலைக் கழகம்
நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உட்பட 7 இடங்களில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 3 அரசு தோட்டக்கலை கல்லூரிகள், 2 அரசு வேளாண் பொறியியல் கல்லூரிகள், ஒரு அரசு வனவியல் கல்லூரி ஆகியன உள்ளன.
இவை தவிர 13 தனியார் வேளாண் கல்லூரிகளும் உள்ளன.இந்தக் கல்லூரிகளில் வேளாண்மை, அதனைச் சார்ந்த 13 விதமான படிப்புகள் கற்பிக்கப் படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்து படித்து வருகின்றனர்.இந்நிலையில், வேளாண் படிப்பை மாணவர்கள் தேர்வு செய்வது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக அளவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது சமூக, கல்வி, இருப்பிடம் மற்றும் பெற்றோரின் பொருளாதார நிலைமை உட்பட 10 விதமான கேள் விகள் மாணவர்களிடம் கேட்கப்பட் டன.இந்த ஆய்வின் முடிவுகளில் சென்னை போன்ற பெருநகரங் களில்இருந்தும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் விவசாயக் கல்வியில் சேர்வது குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
தனியார் பள்ளிகளில் படித்தவர் களில் 82 சதவீதம் பேரும்,அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த வர்களில் 13.7 சதவீதம் பேரும், அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் 4 சதவீதம் பேரும் வேளாண் கல்வி யில் சேர்கின்றனர். மாநகராட்சி பள்ளிகளில் பயின்றவர்கள் வேளாண் படிப்பில் குறைவாகவே சேர்கின்றனர். இவ்வாறு சேரும் மாணவர்களில், மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் கிராமம் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதியை சேர்ந்தவர்களாக உள்ளனர்.சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்றவர்களில் 15.3 சதவீதம் பேர், வேளாண் படிப்பை தேர்வு செய் கின்றனர்.
எஞ்சிய 84.7 சதவீதம் பேர் பிற மாவட்டங்களை சேர்ந்த வர்கள். 36 சதவீத மாணவர்களின் பெற்றோர் அரசுப் பணிகளில்உள்ளனர். தற்போது வேளாண் படிப்பவர்களில் 85 சதவீதம் பேர் முதல் பட்டதாரிகள் ஆவர்.எதற்காக வேளாண் படிப்பில் சேர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு, 24 சதவீதம் பேர் வேளாண் துறை யில் மாற்றத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், 10 சதவீதம் பேர் புதிய வேளாண் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கவும், 17 சதவீதம் பேர் வேளாண் புரட்சி ஏற்படுத்தவும், 15 சதவீதம் பேர் விவசாயத் தொழிலை மேற்கொள்ள வும் இப்படிப்பில் சேர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு தொடர்பாக மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சி.சுவாமிநாதன் கூறியதாவது: வேளாண்மை தேசிய பொருளாதாரத்தின் உயிர்நாடி ஆகும். உணவுப் பாதுகாப்பில் நிலையான தன்மையை அடைய வும், மக்களின் நலனுக்காகவும் வேளாண் வளர்ச்சி முக்கியமானது. தமிழகத்தில் 40 சதவீத மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.எனவே, வேளாண் தொடர்பான படிப்புகளில் இளைஞர்கள் ஆர்வ முடன் பங்கேற்பது அவசியமாகும். அனைவருக்கும் போதுமான அளவு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேளாண்மைத் துறை மற்றும் வேளாண் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக