நாளை, மே, 22ம் தேதி நடக்க இருந்த, ஊழியர் நியமன எழுத்துத் தேர்வை, தமிழக மின் வாரியம் ஒத்திவைத்து உள்ளது.
மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளதால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, இளநிலை உதவியாளர், தணிக்கையாளர் உட்பட, 2,175 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் பிப்ரவரியில் வெளியிட்டது.
தேர்தல் நடத்தை விதிமுதல் கட்டமாக, 525 தொழில்நுட்ப உதவியாளர்கள், 50 உதவி வரைவாளர்கள், 900 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, ஏப்ரல், 3ல் எழுத்துத்தேர்வு நடத்த திட்டமிட்டது. ஆனால், மார்ச் மாதம், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது; தேர்வு, மே, 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெ., பதவியேற்புதேர்தலில் வெற்றி பெற்று உள்ள, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, மே, 23ம் தேதி முதல்வராக பதவிஏற்க உள்ளார். இதனால், மே, 22ல் நடக்க இருந்த எழுத்துத் தேர்வை, மின் வாரியம் மீண்டும் ஒத்திவைத்துஉள்ளது.
இதுகுறித்து, மின் வாரியம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பு:அண்ணா பல்கலை மூலம், 22ம் தேதி நடக்க இருந்த எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு, www.tangedco.gov.in மற்றும் tangedco.directrecruitment.in என்ற இணையதளங்களின் முகவரியில் காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கால அவகாசம் கிடைக்குமா?
மின் வாரிய தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்த அவகாசம் மட்டும் வழங்கப்பட்டதால், பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே, தேர்வை நடத்துவதற்கு முன், விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக