கடந்த, ஒரு மாதத்தில் எடுத்த கணக்கெடுப்பில், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில், 6 முதல், 14 வயதுடைய குழந்தைகள், 100 சதவீதம் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுதோறும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம், பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பாண்டு மாநிலம் முழுவதும், 79 ஆயிரத்து, 844 நகர, கிராமங்களில் கணக்கெடுப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்., 5ம் தேதி முதல், இம்மாதம், 5ம் தேதி வரை நடந்த கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும், 21 ஆயிரத்து, 755 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுஉள்ளனர்.இதில், கிருஷ்ணகிரி, அதிகபட்சமாக, 1,949, திருநெல்வேலி, 1,386, விழுப்புரம், 1,384, கோவை, 1,381, குறைந்தபட்சமாக கன்னியாகுமரி, 109, நாகப்பட்டினம், 131 என, பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனர். இவர்களை, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறுஅவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக