ஓட்டுச்சாவடி பணியில் இருந்த ஆசிரியர், மாரடைப்பால் மரணம் அடைந்தார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை, கரட்டுமடத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,
54;புங்கம்புதுார், காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். இவர், காங்கயம் தொகுதிக்கு உட்பட்ட, காங்கயம்பாளையம் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், தேர்தல் முதன்மை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம், அங்கு சென்று பணியை மேற்கொண்டார்.நேற்று காலை, ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது. 11:00 மணியளவில் செல்வராஜுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு, அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். ஓட்டுச்சாவடிக்கு உடனடியாக, மாற்று அலுவலர் நியமிக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்தது. இச்சம்பவத்தால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், சோகமாக காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக