ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்புக்கு, வரும் 20ம் தேதி முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பில், ஒற்றை சாளர முறையில்,மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதி முதல், ஜூன் 10ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல், மாலை5:00 மணி வரை வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில், விண்ணப்பங்களை பெறலாம். பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர், 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர், 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பங்களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக