லேபிள்கள்

2.4.17

ஊழியர்களுக்கு புதிய 'அலவன்ஸ்' கிடைப்பதில்... தாமதம்? இன்னும் தீரவில்லை 7வது சம்பள கமிஷன் குளறுபடி

புதுடில்லி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப, 'அலவன்ஸ்' எனப்படும், 'படி'களை மாற்றி அமைப்பதில், இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இதனால், ஏப்., 1 முதல், புதிய விகித அடிப்படையில், 'படி' வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. 


மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப் படுகின்றன; ஊதியக் குழு பரிந்துரையின் அடிப் படையில், சம்பள விகிதம் மாற்றி அமைக்கப் படுகிறது.

அதன்படி, ஏழாவது ஊதியக் குழு அளித்த பரிந் துரைகளை, மத்திய அரசு, 2016ல் அமல்படுத்தி யது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.5 சதவீதமும், ஓய்வூதியதாரர்களுக்கு, 24 சதவீதமும் ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, சம்பளத்துடன் கூடிய படியும், உயர்த்தப்பட வேண்டும். இது தொடர்பாக, மத்திய நிதித் துறை செயலர் தலைமையில், 
2016 ஜூலையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பல மாதங்களாக ஆய்வு செய்து வரும் இக் கமிட்டி, தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க, கால தாமததித்து வருகிறது. 

மத்திய அரசு ஊழியர் களுக்கு இதுவரை, 196 வித மான படிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில், பலவற்றை ரத்து செய்யும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்தது. அது போலவே, வீட்டு வாடகை படியை முடிவு செய்வதிலும் சிக்கல் நீடிக் கிறது. இக்கமிட்டி, நீண்ட ஆலோசனை நடத்திய பின்னும் முடிவு எட்டப்படவில்லை. சில தினங் களுக்கு முன், டில்லியில் கூடிய இக்கமிட்டி கூட்டத் தில், சில படிகளை ரத்து செய்வது தொடர்பாக, மத்திய அரசின், 14 துறைகளிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு மேலும் தாமதமாக கூடும். எனவே, முன்ன தாக திட்டமிட்டபடி, புதிய நிதியாண்டின் துவக்க மான, ஏப்., 1ல் இருந்து, மாற்றியமைக்கப் பட்ட, படிகளை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது.எனினும், பணிகளை முடித்து, பார்லி., கூட்டத் தொடர் முடிந்த பின், ஏப்., இறுதி யில், மத்திய அரசு, படி விபரங்களை அறிவிக்கலாம் என, தெரிகிறது. அதே சமயம், படிகளை, முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
வீட்டு வாடகை 'படியில்' மாற்றம்?

'மெட்ரோ' நகரங்களில், அடிப்படை சம்பளத் தில், 30 சதவீதம் வாடகை படியாக வழங்கப்படுகிறது. இதை, 24 சதவீதமாக குறைக்க வேண்டும் என,ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்து
இருந்தது. இதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர் . எனவே, தற்போது உள்ளபடி,30 சதவீத வீட்டு வாடகை படியே, தொடர்ந்து வழங்க கமிட்டி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
53 படிகள் நீக்கம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு, தற்போது, 196 வித மான, 'படிகள்' வழங்கப்படுகின்றன. இவற்றில், சமையல், கண்காணிப்பு, முடிவெட்டுதல், சோப், சீருடை, துவைத்தல், ஷூ, சுருக் கெழுத்து என, பலவித படிகள் வழங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இவற் றில் சில நீக்கப்படுகின்றன. மேலும், சில வற்றை ஒன்றிணைத்து ஒரே படியாக வழங்க வும், கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 196 படிகளில், 53 படிகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், 36 படிகள் மற்றவற்றுடன் இணைக்கப்படுகின்றன. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக