லேபிள்கள்

2.4.17

புது ஐ.டி.ஆர் விண்ணப்பம் இன்று முதல் அறிமுகம்

டெல்லி: வருமான வரி தாக்கல் செய்யும் மாத சம்பளதாரர்களுக்காக
இன்று முதல் புது வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் ஐடிஆர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் படிவத்துடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் இந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.


புது ஆண்டு, புது சட்டம், புதிய பாரதம் உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் அறிவித்தார். நமது நாட்டில் ஏப்ரல் 1முதல் மார்ச் 31 வரை, நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு காலக்கெடு நிறைவு , பட்ஜெட்டில் வருமான வரி விகிதம், வங்கி வைப்புத்தொகையில் மாற்றம் மற்றும் பல்வேறு கட்டணங்கள், வரி விகிதங்களில் மாற்றத்துடன் புதிய நிதியாண்டு துவங்கியது.


மாதச் சம்பளம் மற்றும் வட்டி வருவாய் ஈட்டும் தனி நபர்கள் எளிய முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விதமாக 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கான விண்ணப்ப படிவத்தில் பல்வேறு பத்திகள் குறைக்கப்பட்டு உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக