லேபிள்கள்

6.4.17

'டிஜிட்டல்'மயமாகிறது அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு : தேனியில் பயிற்சி துவக்கம்

அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை ' டிஜிட்டல்' மயமாக்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி தேனியில் துவங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும், பணிப்பதிவேடு (எஸ்.ஆர்.புக்) என்பது கையால் எழுதி தயார் செய்யப்பட்ட ஆவணங்களாக உள்ளது. இவை சேதமடையும் வாய்ப்பு உள்ளதால், பல ஊழியர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அரசு ஊழியரின் உயிர்நாடியான பணிப்பதிவேட்டில் பெயர், கல்வித் தகுதி, பணி நியமன விபரம், ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விபரங்கள் அடங்கியிருக்கும்.


தற்போது பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு 'டிஜிட்டல்' மயமாகிறது. இதனால் அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் 'டிஜிட்டல்' மயமாக்கும் பணி 'விப்ரோ' எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தேனி கலெக்டர் அலுவலகத்தில் 'டிஜிட்டல்' மயமாக்கும் பயிற்சி துவங்கியுள்ளது. விரைவில் மாவட்டத்தில் உள்ள 16,700 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' 
மயமாக்கப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக