மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.சமீபத்தில், பாந்த்ராவில் உள்ள, ரிஸ்வி ஸ்பிரிங்பீல்டு பள்ளியில், 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அடங்கிய ரிப்போர்ட் கார்டை பெற, அவர்களது பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம், ரிப்போர்ட் கார்டுடன், பெற்றோருக்கான விதிமுறைகள் அடங்கிய புதிய உத்தரவும் வழங்கப்பட்டது.
அதில், 'பள்ளியில் ஆசிரியர்கள் சந்திப்பு, முக்கிய கூட்டங்களுக்கு வரும் பெற்றோர், கண்ணியமான உடை அணிந்து வர வேண்டும்; பள்ளி வளாகத்திற்குள் வந்தவுடன், தங்களிடம் உள்ள, மொபைல் போன்களை, பள்ளி வரவேற்பறையில் உள்ள ஊழியரிடம் கொடுக்க வேண்டும்;
ஊழியர்களுடன் கொச்சை மொழியில் பேசக் கூடாது; மீறுவோர் மீது, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
பள்ளியின் இந்த திடீர் நடவடிக்கைக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக