லேபிள்கள்

3.4.17

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் கோரியதால் அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.:
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, ‘மே 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கடந்த பிப்ரவரி 21-ந்தேதி உத்தரவிட்டனர்.



இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி மே 14-ந்தேதிக்கு முன்பு தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது’ என்று கூறியுள்ளது.

மேலும் அந்த பதில் மனுவில், ‘வாக்காளர்கள் பட்டியலை தயாரிப்பது, தேர்தல் குறித்த பயிற்சி வகுப்புகள், வேட்பு மனுக்கள் தாக்கல் மற்றும் பரிசீலனை ஆகியவைகளுக்கு தேவையான கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மே 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். 

“உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் ஏன் சிரமம், ஏன் இவ்வளவு? பிரச்சினைகளை தீர்க்கவே நீதிமன்றங்கள் உள்ளன, அரசை நடத்துவதற்கு அல்ல. மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக