தமிழகத்தில் மூன்று முக்கிய பல்கலைகளின் புதிய துணைவேந்தர்களை முடிவு செய்யும் தேடல் குழுக்களின் பணி முடிவுற்ற நிலையில், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தெரியும் வரை தாமதப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பல்கலை, கல்லுாரிகளின் கல்வித் திறன் தரவரிசை கேள்விக்குறியாகி வரும் நிலையில், சென்னை பல்கலை, சென்னை அண்ணா மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகளின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணி 'ஜவ்வாக' இழுக்கிறது. இதனால் உயர்கல்வி குறித்த சர்ச்சை வலுத்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர் இல்லை. சென்னை மற்றும் அண்ணா பல்கலைகளிலும் துணைவேந்தர்கள் இல்லாததால் குளறுபடி ஏற்பட்டுகிறது.
இதுகுறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், த.மா.கா., தலைவர் வாசன் போன்ற கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தேடல் குழுக்கள் தங்கள் பணிகளை முடித்து கவர்னர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டன. ஆனால் மூன்று குழுக்களுக்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: சென்னை பல்கலைக்கு தேவநாராயணன், அண்ணா பல்கலைக்கு பாஸ்கரன், மதுரை காமராஜ் பல்கலைக்கு முருகதாஸ் ஆகியோர் தேடல் குழுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இம்மூன்று குழுக்களும் தகுதி அடிப்படையில் புதிய துணைவேந்தர்களாக தலா மூவரை தேர்வு செய்யும் பணியை முடித்துவிட்ட நிலையில், கவர்னரை சந்தித்து அப்பெயர்களை பரிந்துரை செய்வதற்காக தேதி கேட்டு கடிதங்கள் அளித்துள்ள நிலையில், ஒரு வாரத்தை கடந்தும் இதுவரை எந்தக் குழுவையும் அழைக்கவில்லை.
இந்நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்.,12ம், முடிவு 15ம் தேதியும் வெளியாகிறது. இதில் போட்டியிடும் அ.தி.மு.க., அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் வெற்றியை அரசு எதிர்பார்க்கிறது. முடிவு வரும் வரை கவர்னர் அலுவலகமும் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கும் முடிவுக்கு காத்திருக்கிறது. இது, உயர்கல்விக்கு பிடித்த கேடு, என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக