இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் சான்றிதழ்களை தயார் செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடக்கும். இதற்காக, உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால், தொழிற்நுட்ப கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் மற்றும் மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டியினர், வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர்.
மருத்துவ கல்வி இயக்குனரகம், சி.பி.எஸ்.இ., தேர்வு வாரியம், தமிழக வேளாண் பல்கலை, ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றின் கவுன்சிலிங் தேதிகளை பாதிக்காமல், தேதியை அறிவிக்க, கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர். இடைப்பட்ட காலத்தில், கவுன்சிலிங்குக்கு தேவைப்படும் சான்றிதழ்களை தயார் செய்து கொள்ள, மாணவர்களையும், பெற்றோரையும், இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியினர் அறிவுறுத்தியுள்ளனர். கவுன்சிலிங்கில் இடஒதுக்கீடு பெற, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி என்பதற்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ், விளையாட்டு பிரிவில் சேருவதற்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தேவைப்படும். மேலும், இலங்கை தமிழர் முகாமில் இருப்பதற்கான சான்றிதழ், சுதந்திர போராட்ட வீரர் மற்றும் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கான சான்றிதழ் போன்றவற்றை, தற்போதே தயார் செய்து வைக்கும்படி, மாணவர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக