லேபிள்கள்

8.6.17

கல்வி சீருடன் குழந்தைகள்! முதல் வகுப்பில் 100% மாணவரை சேர்த்த அரசுப்பள்ளி!!!

வடசிறுவளூர் நடுநிலைப் பள்ளி முதல் வகுப்பில் 100% சேர்க்கை உறுதிசெய்யப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் வடசிறுவளூர் ஊ ஒ ந நி பள்ளியில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழா மற்றும் கல்விச் சீர் வழங்கும் விழா பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக இன்று நடைபெற்றது..
விழாவில் கிராமத்தில் 5 வயது நிரம்பிய 26 மழலையர்களையும் ஒரே நாளில் பள்ளியில் சேர்த்தனர்.இதன் மூலம் ஒன்றாம் வகுப்பில் 100% சதவீத சேர்க்கை நிறைவடைந்தது.விழாவை கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஏழுமலை துவக்கி வைத்தார்.வட்டார வள மேற்பார்வையாளர் சங்கர் அவர்கள் மாணவர்களுக்கு மாலை அணிவித்து பள்ளி சீருடையை வழங்கினார்....தலைமை ஆசிரியை திருமதி பத்மாவதி அவர்கள் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்..கிராம மக்கள் சார்பாக மேளதாளங்கள் முழங்க பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர்..நிறைவாக திருமதி ரேவதி அவர்கள் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக