திருநெல்வேலி அருகே உள்ளது, தென்பத்து ஊராட்சி. அங்கு கரிக்காதோப்பில், மானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்படுகிறது.
இப்பள்ளி, ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியருடன் இயங்குகிறது. நேற்று பள்ளி துவங்கிய தினத்தில், வந்தது என்னவோ, வெறும் ஐந்து குழந்தைகள் தான். தமிழக அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி, நவீன கற்பித்தல் முறை, அடிப்படை வசதிகள் செய்து தந்தாலும், குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரிடம் ஆர்வம் வரவில்லை.
இது குறித்து, தலைமையாசிரியை லோகம்மாள் கூறியதாவது: இந்த பள்ளியில், கடந்த ஆண்டு, மூன்று குழந்தைகள் மட்டுமே படித்தனர். இந்த ஆண்டு, ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளோம். எனினும், பெற்றோரின் ஆர்வமின்மையால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இப்போது, புதிதாக சேர்ந்த இருவருடன், ஐந்து மாணவ, மாணவியர் வந்துள்ளனர். கூடுதல் மாணவர்களை சேர்க்க, பெற்றோரை சந்தித்து பேச உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.தென்பத்து ஊராட்சியில், 1,500 பேர் வசிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் அதிகமான எழுத்து பயிற்சி, பேசும்திறன் வளர்ப்பு மற்றும் ஆசிரியர்கள் பள்ளி நேரம் முடிந்தும் அதிக நேரம் மாணவர்களுக்கு பல பயிற்சிகளை சொல்லித்தருகின்றனர். அதுபோல் அரசுப்பள்ளிகளில் பின்பற்றலாம். முயன்றால் முடியாதது எதுமில்லை
பதிலளிநீக்கு