தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்று முதல் இரு நாட்கள், தத்கலில் விண்ணப்பிக்க, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஜூன், 28 முதல், ஜூலை, 14 வரை நடக்கிறது. இதற்கு, மே, 22 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதில், விண்ணப்பிக்க தவறியவர்கள், இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தாங்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், நாளை மாலை, 5:00 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக