லேபிள்கள்

7.6.17

கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த விரைவில் உருவாகிறது தனி அமைப்பு

புதுடில்லி:நாட்டின் உயர் கல்வி நிறுவனங் களை கட்டுப்படுத்தும், யு.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி. டி.இ., அமைப்புகளுக்கு பதிலாக, ஒருங்கி ணைந்த ஒரே உயர் கல்வி கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

புகார்
நாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கு கின்றன. பல்கலைகளுக்கு நிதி ஒதுக்குவது, அதற்கு அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட பொறுப்புகளை, யு.ஜி.சி., கவனிக்கிறது.அதே போல், தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளின் கீழ் செயல்படுகின்றன.

தற்போதையநடைமுறைகளால், உயர் கல்வி அமைப்பின் செயல் பாடுகளில், பல சிக்கல்கள் ஏற்படுவதாக புகார் எழுந் துள்ளது.அதேபோல், கலை படிப்புகள், தொழில்நுட்ப படிப்புகளுக்கென தனித் தனியான ஒழுங்குமுறை கவுன்சில்கள் செயல்படுவதால், கல்வித் துறை செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 
திட்டம்

எனவே, இந்த இரு அமைப்புகளையும் கலைத்து விட்டு, அதற்கு பதிலாக, 'ஹீரா' எனப்படும், உயர் கல்வி மேம்பாட்டுஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், 'நிடி ஆயோக்' அமைப்பு மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இணைந்து பணி யாற்றி வருகின்றன.இதற்கான திட்டம் வகுக்க பட்டு,அது குறித்த சட்ட திட்டங்கள் அடங்கிய வரைவு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இரு வெவ்வேறு அமைப்புகளுக்கு பதிலாக, உயர் கல்வியை ஒழுங்குபடுத்த, ஒருங்கி ணைந்த ஒரே அமைப்பு செயல்படுவதன் மூலம், கல்வித் தரத்தை உயர்த்துவதோடு, நடக்கும் ஊழல்களை தடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக