லேபிள்கள்

4.6.17

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை சேர்க்க உத்தரவு

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய கல்வி ஆண்டு நேற்று துவங்கியது. கோடை விடுமுறை முடிந்து, வரும், 7ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன், மாணவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும்படி, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

• உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6ம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அருகில் உள்ள தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளிகளில் இருந்து, மாணவர்களின் விபரங்களை பெற்று சேர்க்க வேண்டும்

• மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த வேண்டும்

• வகுப்பறை கட்டடங்களின் உறுதித்தன்மை, மின் சுவிட்சுகளின் செயல்பாடுகள், மேற்கூரையின் தன்மை, கழிப்பறை பராமரிப்பு, குடிநீர் வசதி போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தேர்ச்சியை காரணம் காட்டி, தனியார் பள்ளிகளிலிருந்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டால், அவர்களை அரசு பள்ளிகளில், ஒன்பது, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் சேர்க்க, தயக்கம் காட்டக் கூடாது. 

அதேநேரம், எந்த பள்ளியிலிருந்து மாணவர் வெளியேற்றப்பட்டார் என்ற தகவலை, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக