கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான மாநில தகுதி தேர்வு (செட்) முடிவுகளை வெளியிடுவதற்கு முன் சி.பி.எஸ்.இ.,யின் 'நெட்' தேர்விலுள்ள யு.ஜி.சி., நடைமுறையை பின்பற்ற வேண்டும், என பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர 'செட்' தேர்வு ஏப்.,23ல் நடந்தது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை இத்தேர்வை நடத்தியது. தேர்வுத் தாள் மதிப்பீட்டு முறை மே துவங்கி இன்று (ஜூன் 7) முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்வு எழுதியவர்களில் முதல் 15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ., நடத்தும் 'நெட்' தேர்வு நடைமுறை இதில் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து 'செட்' தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: தெரசா பல்கலை சார்பில் 'செட்' தேர்வின் சரியான விடை (ஆன்சர் கீ) மற்றும் வினாத்தாளின் நகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
விடைகளில் தவறு இருக்கும் பட்சத்தில் பல்கலை கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என
அறிவிக்கப்பட்டது.
தேர்வு எழுதியவர் விடை விவரம் கிடைத்தால் மட்டுமே, விடைகளை சரிபார்க்க முடியும். ஆனால் அதற்குள் 'பைனல் ஆன்சர் கீ' பல்கலையால் வெளியிடப்பட்டது.
தேர்வு எழுதியவுடன், ஓ.எம்.ஆர்., தாளுடன் வினாத்தாளையும் வாங்கிக் கொண்ட பின் விடைகளை எவ்வாறு சரிபார்ப்பது. 'நெட்' தேர்வில் அதிகபட்ச கட்டணம் 600 ரூபாய். ஆனால் 'செட்' தேர்வில் 1500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஆனாலும் 'நெட்' தேர்வு போல் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை. முடிவு வெளியிடுவதற்கு முன் தேர்வரின் ஓ.எம்.ஆர்., தாள் நகல் மற்றும் மதிப்பீடு செய்யப்பட்ட விடை விவரத்தை பல்கலை சார்பில் வெளியிட வேண்டும், என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக