பள்ளி மைதானத்தில் இறைவழிபாடு கட்டாயம் கல்வித்துறை புதிய உத்தரவு
தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு இன்று துவங்குகிறது. அனைத்து பள்ளிகளிலும் எல்லா நாட்களிலும் மைதானத்தில் இறைவணக்கம் கடைபிடிக்க வேண்டும்' என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
'தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 7ல் திறக்கப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்தபடி இன்று பள்ளிகள் துவங்க உள்ளன. பள்ளி திறப்பதற்கு முன்பே மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், 'ஜாமன்ட்ரி பாக்ஸ்' உள்ளிட்டவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கல்வித்துறை அதிகாரிகள் இந்தப் பணிகளை கடந்த மூன்று வாரங்களாக கவனித்து வந்தனர்.
இறைவழிபாடு சுற்றறிக்கை:
ஏற்கனவே, பள்ளிகல்வித்துறை அனைத்துப் பள்ளிகளிலும் திங்கட்கிழமைகளில் மட்டுமே கொடி வணக்கத்துடன் இறை வழிபாட்டினை பள்ளி மைதானத்தில் நடத்த வேண்டும். மற்ற தினங்களில் கொடி வணக்கம் இல்லாமல் இறை வழிபாட்டினை வகுப்பறைகளில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த கல்வி ஆண்டில் அதனை மாற்றி திங்கட் கிழமைகளில் கொடி வணக்கத்துடன், இறைவழிபாடு நடத்துவதுபோல், வார நாட்களிலும் மைதானத்தில் இறைவணக்கத்தை கட்டாயமாக நடத்த வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: முன்பு திங்கட்கிழமைகளில் மட்டும் கொடிவணக்கம் இருந்தது. மற்ற நாட்களில் மைதானத்திற்கு மாணவர்கள் வர மாட்டார்கள். ஆனால் புதிய உத்தரவில் திங்கட்கிழமை கொடிவணக்கம் இருக்கும். மற்ற நாட்களில் கொடி வணக்கம் இல்லாமல் இறை வழிபாடு மட்டுமே இருக்கும். இதில் மாணவர்கள் மைதானத்திற்கு வந்து இறைவணக்கம் செலுத்திய பின்பே, செல்ல வேண்டும். அறநெறி வளர்ப்பதற்கான நல்ல உத்தரவு இது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக