ஆங்கிலவழி கல்வி துவங்க ஏராளமான அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தாண்டு பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி கல்வி செயல்படுத்த அரசு அனுமதித்துள்ளது.
இந்தாண்டு பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி கல்வி செயல்படுத்த அரசு அனுமதித்துள்ளது.
அரசு பள்ளிகள் தமிழ்வழி கல்வியில் பாடம் நடத்தி வந்தன. ஆங்கில மோகத்தால் அப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கின. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக போட்டிபோடும் வகையில், 2012--13 முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை துவங்க அனுமதிக்கப்பட்டது.மாநிலம் முழுவதும் 3,400 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இருந்த போதிலும் தமிழ்வழி கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களே, ஆங்கில வழியை போதித்ததால், எதிர்பார்த்த மாணவர்கள் சேரவில்லை. இந்த ஆண்டு பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகள் ஆங்கிலவழி கல்வியை துவங்க விண்ணப்பித்து வருகின்றன. மேலும் 2012--13ல் ஆங்கில வழியை துவங்கிய மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 1 துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
2012- -13 ல் ஆங்கில வழி கல்வியில் 6 ம் வகுப்பு சேர்ந்தோர், தற்போது 10 ம் வகுப்பு முடித்தனர். அவர்கள் வசதிக்காக மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் ஆங்கிலவழி துவங்கப்படுகிறது. இதில் உயர்நிலைப் பள்ளியில்
ஆங்கில வழியில் 10 ம் வகுப்பு முடித்தோரும் சேரலாம். மேலும் இந்த ஆண்டு ஏராளமான பள்ளிகளுக்கு ஆங்கிலவழி கல்விக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக