மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, இன்று நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் பேர் உட்பட மொத்தம், 13.27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இரண்டு ஆண்டுகளாக, நீட் தேர்வு நடந்தாலும், இந்த ஆண்டு தான், தமிழக மாணவர்கள் முழுமையாக, தேர்வில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு, தமிழகத்தில் இருந்து, ஒரு லட்சத்து, ௭,480 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 6,444 மாணவியர் உட்பட, 9,752 பேர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்கள்.இவர்களுக்காக, தமிழகத்தில், 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில், 49 மையங்களில், 33 ஆயிரத்து, 842 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலுார் ஆகிய நகரங்களிலும், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த, 5,500 மாணவ - மாணவியர், வெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுத செல்கின்றனர். இவர்களில், 39 பேர், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர். திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து, 5,371 பேர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் தேர்வு மையங்களுக்கு செல்கின்றனர்.
மற்றவர்கள், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்வு மையங்களை தேர்வு செய்துள்ளனர்.நாடு முழுவதும், 136 நகரங்களில், 2,255 தேர்வு மையங்களில், 13.27 லட்சம் பேர், நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 7.46 லட்சம் மாணவியர்; ஒருவர் திருநங்கை. வெளிநாட்டினர், 621 பேர், வெளிநாடு வாழ் தமிழர்கள், 1,842 பேரும், இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.
இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கி, மதியம், 1:00 மணிக்கு தேர்வு முடியும். காலை, 9:30 மணிக்கு மேல், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள், உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மாணவர்கள், ஹால் டிக்கெட், வண்ண புகைப்படத்தை மட்டுமே, தேர்வு மையத்துக்கு எடுத்து வர வேண்டும். தண்ணீர் பாட்டில் உட்பட, வேறு எந்த பொருட்களும் அனுமதியில்லை.
முழு கை சட்டை அணியக் கூடாது; தலையில் பூ வைக்கக் கூடாது; ஆபரணங்கள் அணியக் கூடாது; காது வளையம், ஜிமிக்கி, மூக்குத்தி, வாட்ச் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகளால், மாணவ - மாணவியர் கலக்கம் அடைந்துள்ளனர்.
மஹாராஷ்டிரா, 'டாப்!'
அதிகபட்சமாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில், 345 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளா, 226; கர்நாடகா, 187; உத்தர பிரதேசம், 171; குஜராத், 138, ஆந்திரா, 86; புதுடில்லி, 85; புதுச்சேரி, 12; தெலங்கானாவில், 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 1.84 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். கேரளா, 1.20 லட்சம்; உத்தர பிரதேசம், 1.14 லட்சம்; ராஜஸ்தான், ஒரு லட்சம்; கர்நாடகா, 96 ஆயிரம், ஆந்திரா, 49 ஆயிரம்; புதுடில்லி, 57 ஆயிரம்; குஜராத், 75 ஆயிரம் மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்பு பஸ்கள்
-கேரளாவில், 'நீட்' தேர்வு எழுதும், மாணவ - மாணவியருக்காக, நெல்லையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களைச் சேர்ந்த, 5,000 மாணவர்களுக்கு, நீட் தேர்வு எழுத, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில், தேர்வு
மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, நேற்று, நெல்லை புதிய பஸ் நிலையத்தில், எர்ணாகுளத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில், காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.கலெக்டர் சந்தீப் நந்துாரி கூறுகையில், ''திருநெல்வேலியில், 10 மையங்களில் தேர்வு நடக்கிறது. 4,380 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 2,377 பேர்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக