இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணத்தை, டி.டி., வழியாக செலுத்தும் வசதியை, ௧௮ம் தேதி முதல் வழங்குவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர்கள் சேர்க்கைக்கான குழு
தெரிவித்துள்ளது. இதை பதிவு செய்து, விசாரணையை, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.அண்ணா பல்கலையின், 'ஆன்லைன் கவுன்சிலிங்'கை எதிர்த்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், வழக்கறிஞர் பொன் பாண்டியன் மற்றும் முரளி, மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மனுக்கள் விசாரணைக்கு வந்தன.கேள்விவிசாரணையின் போது, 'வங்கி கணக்கு இல்லாத கிராமப்புற மாணவர்கள், 'கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங்' வசதிகளை பயன்படுத்தி, எப்படி கட்டணம் செலுத்த முடியும்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். எனவே, மாற்று வழியாக, டி.டி., எனப்படும், வங்கி டிராப்ட் அல்லது நேரில் கட்டணத்தை செலுத்த அனுமதிக்க முடியுமா எனவும் கேட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அண்ணா பல்கலை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், மணிசங்கர், அரசு பிளீடர், ராஜகோபாலன் ஆஜராகினர்.இன்ஜி., மாணவர்கள் சேர்க்கைக்கான செயலர் சார்பில், சிறப்பு பிளீடர், எல்.பி.சண்முகசுந்தரம் தாக்கல் செய்த, கூடுதல் மனு:ஏற்கனவே, 'ஆன்லைன்' பதிவு நடந்து கொண்டிருப்பதால், டி.டி., வழியாக, கட்டணத்தை செலுத்தும் வகையில், கூடுதலான வசதியை ஏற்படுத்த, ஒரு வாரம் தேவைப்படுகிறது. தள்ளிவைப்புவரும், ௧௮ம் தேதி முதல், டி.டி., வழியாக கட்டணத்தை செலுத்தும் வசதி, மையங்களில் கிடைக்கும். இந்த வசதியை, விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை பதிவு செய்து கொண்டு, விசாரணையை, நீதிபதிகள் தள்ளி
வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக