:'ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, சட்டசபையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் சீனுவாசன், பொருளாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பொது செயலாளர் லட்சுமணசாமி தலைமையில், முதல்வரை சந்தித்து, ஆசிரியர்கள் தொடர்புடைய பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்த உயர்த்தப்பட்ட வீட்டு வாடகை படியை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும்.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒரே சம்பள விகிதமான 17 ஆயிரத்து 140 ரூபாயை அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்து, ஆணை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். கோரிக்கைகளை, வரும் கூட்டத் தொடரிலேயே அறிவித்து நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக