சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிந்த நிலையில், முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு சோதனை நடத்தி வருகிறது.
'நீட்' தேர்வு, அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டங்களில் அதிகளவில் வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதனால் சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் அதிகரித்தது. தமிழகத்தில் புற்றீசல் போல் ஏராளமான பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன.
அவற்றை கண்காணிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அப்பள்ளிகளில் பிப்ரவரியிலேயே மாணவர்கள் சேர்க்கை துவங்கின.கூடுதல் கட்டணம் வசூலித்தல், போதிய கட்டட வசதிகள், முறையான அனுமதி இல்லாதது குறித்து புகார் எழுந்தது. மாணவர்கள் சேர்க்கை முடிந்த நிலையில் மாநிலம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் பொதுப்பணி, தீயணைப்பு, சுகாதாரம், மின்வாரிய அதிகாரிகள் பள்ளிகளை சோதனை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக