லேபிள்கள்

11.5.18

ஆபத்தான நிலையிலுள்ள பள்ளிகளை இடிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள 100 பள்ளி கட்டடங்களை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்டத்தில் ஆயிரத்து 149 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இரு ஆண்டுகளுக்கு முன், இருபது முதல் 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பள்ளி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 120க்கும் மேற்பட்டவை இடிந்து விழும் நிலையில் இருந்தன. இவற்றின் புகைப்படத்தை தலைமைஆசிரியர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு அனுப்பினர். 
அதில் சில கட்டடங்கள் இடிக்கப்பட்டன, 100 க்கும் மேற்பட்டவைஇடிக்கப்படவில்லை. அந்த கட்டடங்களுக்கு அருகே மாணவர்கள் விளையாடுவதால் விபத்து அபாயமும் உள்ளது. சில பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய கட்டடங்களை இடித்தால் தான் புதிய கட்டடம் கட்ட இடம் கிடைக்கும் நிலை உள்ளது. 
ஆபத்தான நிலையில் உள்ள 100 கட்டடங்களையும் விடுமுறைக்குள் அவற்றை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சேதமான பள்ளி கட்டடங்களில் மாணவர்களை அனுமதிப்பதில்லை. சமுதாயக் கூடம், வாடகை கட்டடங்களில் வகுப்பு நடத்தப்படுகிறது. சேதமடைந்த கட்டடங்களை இடிக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தும் தாமதப்படுத்தி வருகின்றனர். விடு முறைக்குள் இடிக்க கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக