''அரசியல் மாற்றத்துக்கான சூழலை, ஊழியர் சங்கத்தினர் உருவாக்குவோம்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்பிரமணியன் கூறினார்.ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி
:புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடந்தன. அரசு ஊழியர், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகள் வைத்தோம்.இதில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் நீதிபதிகளுக்கான ஊதிய முரண்பாடு களையப்பட்டுள்ளது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலர்களுக்கு, காலமுறை ஊதிய கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால், இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.தமிழக அரசு வருவாயில் இருந்து, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 21 சதவீதம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில், ஓய்வூதியமும் சேரும். ஆனால், முதல்வர் பழனிசாமி, அதிக சதவீதம் சம்பளம் தருவதாக கூறுகிறார்.கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோட்டை நோக்கி, நாளை பேரணியாக சென்று, முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்.கடந்த, 2003ல் நடந்ததை போல், போராட்டத்தை அடக்க நினைத்து, அடக்குமுறையை கையாண்டால், அரசியல் மாற்றத்துக்கான சூழலை, ஊழியர் சங்கத்தினர் உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக